Monday 21 March 2011

எம்.சி.ஏ முதல் வருடம்

                                                         முதல் நாள் வகுப்புக்குள் நுழைந்ததும் எப்படி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட எந்த நண்பன் அருகில் உட்கார போகின்றோம் என்ற எண்ணமே மனம் முழுவதும் இருந்தது....... எங்கள் வகுப்பில் மொத்தம் 60, அதில் 50 மாணவர்கள், 10 மாணவிகள்.

                                                            முதல் வகுப்பும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் சாதாரணம் என்றாலும், அதில் நிறைந்திருந்த சுவாரசியங்கள் கடல் போல் ஏராளம்.

சுவாரசியம் 1 (சுரேஷ் குமார் ரெப் ஆனது)

                                                           முதல் நாள் வகுப்பு ஆரம்பித்ததும் யார் எங்கள் ரெப் என்று முடிவு எடுக்க வேண்டிய  நேரம் வந்தது. ஜெயந்திலா மேடம் ஒரு கேள்வி கேட்டாங்க, "Define Leadership". இந்த கேள்விக்கு நாங்க பதில் சொல்லலாமா  வேண்டாம்னு முடிவு செய்யரதுகுள்ள ஒருத்தன் எந்திச்சி பதில் சொல்ல ஆரம்பிச்சான் அவன் தான் எங்கள் அருமை தோழன் தானை தலைவன் சுரேஷ் குமார்.  

                                                            நாங்க எல்லாருமே அந்த கேள்விக்கு பதில் சொன்னோம், அதுல ஏகப்பட்ட தப்பு கண்டுபிடிச்சு  எங்க எல்லாரையும் மேடம் உட்கார வச்சிட்டாங்க, ஆனா சுரேஷ் சொன்ன பதில் மேடம்க்கு ரொம்ப பிடிச்சி போய் அவனை கிளாஸ் ரெப் ஆகிட்டாங்க. ஆனா கடைசி வரைக்கும் அவன் அப்படி என்ன தான் Define செஞ்சானு எங்களுக்கு சத்தியமா தெரியாது.
நிற்க! ஒருத்தன் தலைவன் ஆகனும்னா அவன் என்ன பேசுறாம்னு அவன் தொண்டர்களுக்கு புரிய கூடாது, ஏன் சமயத்துல அவனுக்கே புரிய கூடாது! அப்பனா தான் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. இப்படி பட்ட பல நல்ல தகுதிகள் இருக்ற ஒரே ஆள் நம்ம சுரேஷ் குமார் தான். 

                                                           உண்மைய சொல்லணும்னா அவன மாதிரி ஒரு ரெப் கிடைகறதுக்கு நாங்க எல்லாருமே கொடுத்துவச்சிருகனும், ஏன்னா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரயே நடிப்பான், அம்ம்புட்டு நல்லவன்.
எங்க கிளாஸ்க்காக ஓடா தேஞ்சதுல 5 கிலோ அதிகமாய்ட்டான். இப்ப வரைக்கும் அந்த பதவிக்கு போட்டி இல்லனா அதுக்கு காரணம் சுரேஷ் குமார் தான். இவன பத்தி முக்கியமான விஷயம் என்னன்னா எவளவு சின்ன பிரச்னை வந்தாலும் அத ரொம்ப பெருசா மாத்தி விட்ருவான், அத சுமூகமா தீத்து வைக்கறதும் அவன் தான். கிளாஸ் ல எந்த staff எப்ப வந்து என்ன கேள்வி கேட்டாலும் அசராம answer பண்றது தான் அவன் specialty. 

சுவாரசியம் 2 (பாண்டிகுமார் சார் )
 
                                                   எங்க எம்.சி.ஏ வரலாறுல நாங்க ஒழுங்கா  படிச்சு பாஸ் பண்றோம்னா அதுக்கு காரணம் PK சார் தான். முதல் நாள் கிளாஸ்க்கு வந்தபோ ரொம்ப சின்ன பையனா இருந்தாரு, ரொம்ப ஜாலி டைப் நு நினைச்சி ஏமாந்தோம். கிளாஸ்க்கு  வந்ததுமே விஸ்வரூபத்த காட்ட அரம்பிசிட்டாறு. காரணம் அவரு எம்.சி.ஏ  கோல்ட் மெடலிஸ்ட் . எங்களையும்  கோல்ட் மெடல் வாங்க வைக்கனும்ங்ற சபதத்தோட தான் வந்தாரு, பாவம் வாழ்க்கைல எவ்வளவோ வெற்றி பெற்ற அவர் இந்த விஷயத்துல கோட்டை விட்டுட்டாரு.
                                                    சார் எங்களுக்கு 1ஸ்ட் எடுத்த சப்ஜெக்ட் DATA STRUCTURES . அத படிக்க வைக்கரதுகுல அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்ல. HUFFMAN ALGORITHM படிக்க வச்சாரோ இல்லயோ பாலசுப்ரமணியனுக்கு   HUFFMAN னு பேர் வர காரணமா இருந்தாரு. இதுல ஹைலைட் என்னன்னா ராமகிருஷ்ணன ஊற விட்ட ஓட வச்சாரு, திருநெல்வேலிக்கு ஓடி போன அவன சமாதான படுத்தி கூட்டு வரதுகுள போதும் போதும்னு ஆச்சு. அப்புறம் எக்ஸாம்ங்கற பேர்ல எங்க எல்லாரையும் சூரசம்காரமே  செஞ்சிருவாறு. 

                                                   அப்படி இருந்த சார் 2nd செம்ல  செம ஜாலி ஆயட்டாறு, அவரு கிளாஸ் எங்களுக்கு P.T period மாதிரி. என்ன தான் ஜாலியா இருந்தாலும் படிப்பு விசயத்துல கரெக்டா இருப்பாரு. "வேலன்னு வந்தா அவரு வெள்ளக்காரன் மாதிரி". அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, அவரு எல்லார மாதிரி ஜஸ்ட் லைக் தட்டா இல்லாம எல்லாருக்குமே பார்ட் டைம் ஜாப் வாங்கி குடுத்து ஹெல்ப் பண்ணாரு. எங்க கிளாஸ் ல பாதி பேர்  படிக்கும் போதே சம்பாதிச்சங்கான அதுக்கு முக்கியமான காரணம் PK சார் தான்.
சுவாரசியம் 3 (Industrial visit போனது )

                                                          நாங்க Industrial விசிட் போனது மறக்கவே முடியாத சம்பவம். எங்க லைப் ல நாங்க FIRST and LAST போன Industrial விசிட்னா அது தான்.
அதுக்கு போறதுகுள நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். அர்ரியர்ஸ் இருக்கவங்க வர கூடாதுன்னு ரூல் போட்டாங்க. அப்படி பத எங்க கிளாஸ் ல பாதி பசங்க வர முடியாது. நாங்க யாரும் அதுக்கு ஒத்துகல, பாண்டி குமார் சார் H .O .D சுமிதா மேடம் எல்லாரும் எவ்வளவோ பேசி பார்த்தாங்க பசங்க யாரும் சம்மதிக்கவே இல்ல, இப்பொழுது தான் நாங்களே எதிர்பார்க்காத விஷயம் நடந்தது, பசங்க தான் sign பண்ணல பொண்ணுங்கலாவது பண்ணுவாங்கனு எதிர்பார்த்தாங்க ஆனா அவங்களும் பண்ணல. எங்களுகே அது ஆச்சரியமா இருந்தது. இதன் முழு விவரமும் பின் ஒரு பயணத்தில் பார்போம்.

சுவாரசியம் 4 (செல்வமணி இன்  ANNA UNIVERSITY TRIP )
                     
                                             1ஸ்ட் செமின் தேர்வு முடிவுகள் வந்தது, எங்களுக்கு அதிர்ச்சியை விட அச்சரியமே அதிகமாக இருந்தது. ஏன்னா நங்கள் எதிர் பார்த்ததை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கி இருந்தோம் "ஒருவனை தவிர" , அவன் தான் செல்வமணிகண்டன். எல்லாருக்கும் ரிசல்ட் வந்தது அவனுக்கு மட்டும்  ANNA UNIVERSITY ல இருந்து லெட்டர் வந்தது. தம்பி இங்க வந்து கொஞ்சம் பஜ்ஜி சாப்டு போங்கனு எழுதி இருந்தது. நாம எல்லாரும் எக்ஸாம் எழுதிட்டு answer கு கீழ கோடு போடுவோம் அவர் மட்டும் answeraia கோடா  போட்டு இருந்தாரு. கூப்டு விட்டாங்க போய் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் சாப்டு வந்தாரு.


                                              பயணம் தொடரும்...............

                                                                         இப்படிக்கு சீனு

Thursday 17 March 2011

என் எம்.சி.ஏ வின் முதல் நாள்

(எங்கள் 3 வருட வாழ்க்கை பயணத்தின் ஓட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் "பொறுமை இருப்பவர்களுக்கு மட்டுமே"   )


                                             அன்று காலை சூரியன் கூட மிக உற்சாகமாக உதிர்த்து விட்டான், ஆனால் 4 மாத ஓய்வுக்கு பின் மீண்டும் கல்லூரி செல்ல வேண்டும் என்ற நினைப்பு சிறிது சோம்பலை தான் கொடுத்து இருந்தது. புதிய கல்லூரி என்பதை விட புதிய நண்பர்களை சந்திக்க போகின்றோம் என்ற  எண்ணம் சிறிது உற்சாகத்தை கொடுத்தது.


                                            நாங்கள் எல்லோரும் தினமும் முதலில் சங்கமிக்கும் இடம் எங்கள் கல்லூரி அல்ல ஆவடி பேருந்து நிலையம் தான்.....முதல் நாளின் ஆரம்பமே  மனதில் சொல்லியது இனி 3 வருடங்களுக்கு இங்கு தான் என்று.... பயணம் ஆரம்பம் ஆகியது . கல்லூரிக்கு செல்லும் அரசு பேருந்து ஏறிவிட்டோம், ஆனால் முதல் பயணத்தில் எங்களுக்கு தெரியாது இவன் நம் வாழ்வின் முக்கியமானவனாக ஆக போகின்றான் என்று.......


                                             கல்லூரிப் பேருந்தில் நல்ல கூட்டம், இடித்துப் பிடித்துக் கொண்டு தான் பயணம் ஆரம்பம் ஆகியது. உற்சாகமான ஆனால் பயம் நிறைந்த பயணம் அது. 5 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும், 10 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பயணத்தின் 30வது நிமிடம் வரை நீடித்தது.


                                        ஒருவழியாக கல்லூரி வந்து சேர்ந்து விட்டோம், வழக்கம் போல securityin அன்பான உபசரிப்பினால் இனிதே வரவேற்கப் பட்டோம். கல்லூரிக்குள் நுழைந்ததும் நான் முதன் முதலில் சந்தித்தது சுரேஷ் குமார் தான், பார்த்த முதல் நொடியில் இருந்து அவன் என்கூட இங்கிலீஷ் ல தான் பேசினான், அத பார்த்ததும் மனதுக்குள் முதல் பயம் ஆகா இங்க எல்லோரும் இங்கிலீஷ் தான் பேசுவாங்க போல என்று, அடுத்த பதில் தான் பயத்திற்கு முக்கியமான காரணம், எந்த காலேஜ்னு கேட்டன் , பச்சயபாஸ்னு சொன்னான், ஆகா பச்சயபாஸே இவ்ளோ இங்கிலீஷ் பேசுதுணா, வாரவன்ல பயங்கரமா இங்கிலீஷ் பேசுவங்கனு எதிர் பார்த்தேன். (என் எதிர்பார்ப்பை பொய் ஆக்கிய என் நண்பர்களுக்கு நன்றி.) அடுத்து சந்தித்தது ராகுல் மற்றும் ஜோதி, இரண்டு  பேரும் என கண்டுக்க கூட இல்ல, நேர அய்யப்பன் ஹால் கு வர சொன்னாங்க அத கண்டு பிடிச்சு போறதுகுள்ள போதும்  போதும் னு ஆச்சு.

                                                என் நண்பர்களாக ஆக போகிறவர்கள் அனைவரின் ஒத்திகை இங்கு தான் நடந்தது, இந்த இடத்தில நான் சந்தித்த முக்கியமான நபர் அல்லது நண்பன் சரவணன், பார்த்த உடனே தெரிந்தது அவன் மிகவும் நன்றாக படிக்கச் கூடிய  மாணவன் என்று தெரிந்தது. அய்யப்பன் ஹாலில் என்னுடன் இருந்தவர்கள் சேலம் சுரேஷ் மற்றும் தினேஷ். அன்றைய நாள் முழுவதும் அவர்களுடன் தான். மிகவும் அமைதியான நண்பர்கள், ஹாலின் முன் மேடையில் எங்கள் ஒத்திகை நடந்து கொண்டிருந்து.

                                             மிகவும் ரம்மியமான ஹால் அது,(எத்தன செமிநார் தூங்கி இருப்போம்). ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் நடந்து கொண்டிருந்தது, ஆனாலும் எல்லோரும் எல்லோரிடமும் அறிமுகம் ஆகிவிடவில்லை. பின் வரிசையில் அமர்ந்து இருந்தவர்கள் அதிகமாக பேசி கொண்டிருந்தனர், அது வழக்கம் தானே. முதல் அறிமுகம் கொடுத்த ஆசிரியர் ஜெயந்திலா மேடம். காலேஜின் அருமை பெருமைகளை கூறிக்கொண்டிருந்தார். அதிலிருந்து எங்கள் முகத்தினில் சோக அலைகள், ஆம் நாங்கள் யாரும் அவ்வளவு ஸ்ட்ரிக்டை அதிர் பார்த்து இருக்கவில்லை, ஆனலும் எங்கள் 3 வருடமும் இனிமையாக தான் கழிந்தது.

முதல் நாள் எனக்கு நியாபகம் இருந்த நண்பர்களும், காரணமும்

சுரேஷ் - முதல் சந்திப்பு
ராகுல், ஜோதி- எதிர் பாரத சந்திப்பு
சுரேஷ், தினேஷ்- பாகத்து இருக்கை
முருக வேல்- முதல் நாள் லந்து (இப்ப வர இவன் தொல்ல தாங்கல ) 
நந்த கோபால் - திருக்குறள் சொல்லி ஸ்கோர் பண்ணான்.
சரவணன்- நல்ல புள்ள 
ராகவன்,கோபி -திருவள்ளூர்
போத் ராஜா - பிரெஞ்சு பியர்ட் 
பஷீர், ராமகிருஷ்ணன், பாலமுருகன் - எங்க ஊரு கார பயபுள்ள
வினோத்- பஸ்சில் அறிமுகம்
திவாகர்- வி ஐ டி
செல்வ மணி, லியோ, பூமி- சல சல சல னு பேசிக்கிட்டே  இருந்தானுங்க 
கார்த்திக் - பி.எஸ்.ஜி
மணிவண்ணன், தினேஷ்,சுந்தர், வைகுண்ட ராஜ், பெருசு - ஸாரி  பாஸ் நியாபகம் இல்ல............  மத்தவங்கல்லா  லேட்டா வந்த்ருபீங்க..........


                                                       - பயணம் தொடரும்.

                                              இப்படிக்கு சீனு